👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
பள்ளி குழந்தைகளுக்காக சத்யராஜ் மகளின் புரட்சிகரமான திட்டம்! ஒப்புதல் கொடுத்த தமிழக அரசு!
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்ட சத்து நிபுணருமான திவ்யா 'அட்சய பாத்திரம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்து மிக்க, உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே, தமிழக அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு, அரசு வழங்கி வரும் நிலையில், தற்போது காலையில் ஊட்டசத்து உணவை அளிக்க திவ்யா திட்டமிட்டார்.
இதற்காக அவர் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து தனது திட்டம் குறித்து விளக்கினார். திவ்வியாவின் இந்த புரட்சிகரமான திட்டத்திற்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே வரும் கல்வியாண்டு முதல், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ராகியினால் செய்யப்பட்ட உணவும், ராகி கலந்த பாலும் காலை உணவாக வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் 'அட்சயப் பாத்திரம்' அறக்கட்டளை மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த திட்டம் வெற்றி அடைந்ததற்கும், இந்த புரட்சிகரமான திட்டத்தை செயல் படத்தை முயற்சி எடுத்ததற்கும் திவ்வியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்