விடுமுறை இல்லாத காலண்டர் அச்சடிக்க மாட்டார்களா?' - ஐந்து வயது மகளுக்காக உருகும் கேரள போலீஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 09, 2019

விடுமுறை இல்லாத காலண்டர் அச்சடிக்க மாட்டார்களா?' - ஐந்து வயது மகளுக்காக உருகும் கேரள போலீஸ்!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோஷம்தான். அதிலும், குழந்தைகள் சந்தோஷத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் இருக்காது.


அந்த அளவுக்கு விடுமுறையின்போது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதேபோல அரசு விடுமுறை, திருவிழா விடுமுறை என்றால், அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிடுவது அவர்கள் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், அப்படி விடுமுறை இல்லாமல் பணிக்குச் செல்பவர்களும் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் போலீஸ். போலீஸுக்கு விடுமுறை என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. அதுவும், திருவிழா சமயங்களில் போலீஸுக்கு விடுமுறை என்பது குதிரைக்கொம்பு போன்றது. அப்படி விடுமுறை கிடைக்காததால், தனது ஐந்து வயது மகளின் சந்தோஷத்தை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தப்படும் ஒரு போலீஸ் தந்தையின் ஃபேஸ்புக் போஸ்ட் வைரலாகிவருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த போலீஸ்காரர், ஷபீர். இவரின் ஃபேஸ்புக் போஸ்ட் தற்போது வைரலாகிவருகிறது.

தன்கூட பணிபுரியும் ஒரு போலீஸ்காரர் விடுமுறைகுறித்து அவரது ஐந்து வயது மகள் கூறியதை ஃபேஸ்புக் பதிவாக வெளியிட்டுள்ளார். அதில், ``ஒரு சனிக்கிழமை இரவு என் ஐந்து வயது மகள் என்னிடம் வந்து, ``அப்பா, நாளை உனக்கு லீவ் தானே'' எனக் கேட்டாள். நான் இல்லை, நாளைக் காலை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றேன். ``இல்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நாளை, காலண்டரில் லீவ் எனப் போட்டிருக்கிறது'' என்று கூறி காலண்டரை எடுத்துவந்து காண்பித்தாள். கூடவே, நாளை நாம் பீச்சுக்கு போகலாம்" என்று ஆசையோடு கூறினாள். நானும், சரி நாளைப் போகலாம் எனக் கூறி அவளை உறங்கவைத்துவிட்டேன். ஐந்து வயது மகளிடம் பொய் சொல்லி உறங் வைப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. காலம் காலமாக காலண்டரில் விடுமுறை வருகிறது.

ஆனால், போலீஸாருக்கு விடுமுறை கிடையாது. போராட்டம் என்றாலும், திருவிழா என்றாலும் நாங்கள் அங்கு இருக்க வேண்டும். இதை நினைத்துக்கொண்டே, மறுநாள் காலை மகளுக்குத் தெரியாமல் சீக்கிரமாகவே வேலைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன். இதுதான் எங்கள் பணி. குடும்பம்குறித்து சிந்திக்காமல் வேலைபார்க்க வேண்டும். ஒவ்வொரு போலீஸும் தனது குழந்தைகளின் சின்னச்சின்ன கனவுகளைச் சிந்திக்காமல் வேலைபார்க்கிறார்கள். எனக்கும் அதேபோலதான். என் மகள் கூறியதை சிந்தித்துப் பார்க்கும்போது தோன்றியது ஒன்றுதான். வேலைக்காக ஐந்து வயது மகளின் ஆசையை ஏமாற்ற விடுமுறை இல்லாத காலண்டரை அச்சடிக்க மாட்டார்களா என்ன, என்றே எனக்குத் தோன்றியது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். இவரின் பதிவு கேரளாவில் தற்போது வைரலாகிவருகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews