👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரியர்ஸ்'இல்லாத தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி, இன்ஜினி யரிங் கல்லூரி மாணவர்கள், சென்னையில் நேற்று அண்ணா பல்கலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த பல்கலைகளில், அண்ணா பல்கலையின் பாடத்திட்டம் அமலில் உள்ளது. அதேபோல், அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில், நான்கு கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 4 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டம், நடைமுறையில் உள்ளது.
இது, சர்வதேச அளவில், தரமான இன்ஜினியரிங் மாணவர்களை உருவாக்க உதவுவதாக, தொழில் துறை நிறுவனங்கள் தரப்பில், கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, மற்ற இணைப்பு கல்லுாரி களிலும், இந்த பாடத்திட்டம், 2017 ஜூலையில்
அமலுக்கு வந்தது.
இதன்படி, 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்பட்டது.அதற்கு பதில், 'ரீ அப்பியரன்ஸ்' என்ற முறை அமலுக்கு வந்தது.
இதன்படி, ஒவ்வொரு மாணவரும், மற்ற துறைகளில் உள்ள பாடங்களில், இரண்டு பாடங்களை, விருப்பப் பாடங் களாக கட்டாயம் படிக்க வேண்டும். அதற்கு, இரண்டு, 'கிரெடிட்' மதிப்பெண்வழங்கப்படும்.
'ஆன்லைன்' முறை படிப்பிலும், கிரெடிட் மதிப் பெண் பெறலாம்.
அதேபோல், ஒரு ஆண்டில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அந்த பாடத்தின், 'இன்டர்னல்' மதிப்பெண்ணும் நீக்கப்படும். அவர்கள், ஒரு ஆண்டு கழித்து, மீண்டும் அந்த பாடத்தை, புதிதாக படித்து, எழுத வேண்டும்.
இதற்காக, அந்த குறிப்பிட்ட பாட வகுப்பிலும், மாணவர்கள் பங்கேற்கலாம். மதிப்பெண் பட்டிய லில், தேர்ச்சி பெறாத பாடம், 'அரியர்' என, குறிப் பிடப்படாது.
இந்த தேர்வு முறை, இரண்டு ஆண்டு களாக அமலில் உள்ள நிலையில், திடீரென சில கல்லுாரி மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள், நேற்று அண்ணா பல்கலை முன் கூடி, போராட்டம் நடத்தினர்.
'இந்த திட்டத் தால், பட்டப் படிப்பை முடிக்க, கூடுதல் காலம் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாடத் திட்டத்தை கைவிட வேண்டும்' என, தெரிவித்தனர்.
*அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளர், குமார் அளித்த பேட்டி*
மாணவர்களில் நலனுக்காக,
கல்வியாளர்கள், சிண்டிகேட், அரசின் உயர் கல்வி அதிகாரிகள், தொழில்நுட்பகல்வி இயக்குனரக அதிகாரிகள் விவாதித்து, 2017ல், புதிய பாடத் திட்டம், தேர்வு முறை அமலுக்கு வந்தது. ஏற்கனவே, இந்த திட்டம், அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரி களில் அமலில் உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பட்டதாரிகளை, தரமான இன்ஜினியரிங் கல்வியுடன் உருவாக்க வேண்டும். அதற்காகவே, இந்த திட்டம் அமலானது.
இந்த திட்டத்தை, மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது, தேசிய, சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட பாடத்திட்டம். மாணவர் களின் கோரிக்கைகள் குறித்து ஆராய, ஆய்வு குழு அமைக்கப்படும். இதற்கு, 10 நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
இணைப்பு கல்லுாரிகள், மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டத்தை விளக்கி, புரிய வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்