உலக வரலாற்றில் இன்று ஜனவரி 6: அகிலம் போற்றும் ஆஸ்கார் நாயகன் AR RAHMAN Bday - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

உலக வரலாற்றில் இன்று ஜனவரி 6: அகிலம் போற்றும் ஆஸ்கார் நாயகன் AR RAHMAN Bday


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின்  ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் தொகு

1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.
1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக  முடிசூடினார்.
1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.
1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன்  இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.

1839 – அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.
1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.

1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர்  அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
1928 – தேம்ஸ் ஆறு லண்டனில்  பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1929 – யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.
1929 – அன்னை தெரேசா இந்தியாவின்  வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச்  சென்றடைந்தார்.
1930 – முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து  சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.

1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில்  ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை  அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை  அடைந்தார்.
1960 – ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1960 – நியூயார்க்கில் இருந்து மயாமி  நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.
1974 – 1973 எண்ணெய் நெருக்கடியைத்  தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.
1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

1993 – சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
2007 – கொழும்பிலிருந்து 36கிமீ  தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

2017 – அமெரிக்காவின் புளோரிடா  மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.

255 – முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)
1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)
1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)
1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)
1899 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)
1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)

1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)
1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக்  குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
1936 – க. பொ. இளம்வழுதி, புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)
1942 – தெணியான், ஈழத்து எழுத்தாளர்
1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்
1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
1989 – பியா பஜ்பை, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள் தொகு

1731 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)
1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில்  எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)
1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)
1918 – கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)
1919 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர்  (பி. 1858)
1937 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)
1943 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)

1944 – என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)
1945 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய வேதியியலாளர் (பி. 1863)
1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)
1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு  மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)
1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)
2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)
சிறப்பு நாள் தொகு

நத்தார் (ஆர்மீனியா)

வேட்டி நாள் (இந்தியா)

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம். பிறப்பு: ஜனவரி 6, 1967 இடம்: சென்னை (தமிழ்நாடு) தொழில்: இசையமைப்பாளர்

பிறப்பு: தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார். ஆரம்ப வாழ்க்கை: ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.

இசை பயணம்: ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.

சாதனைகள்: 1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.

ஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”: 2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.

ஆல்பம்: ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.

பிற விருதுகள்: இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது. இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது. பத்மஸ்ரீ விருது லாரன்ஸ் ஆலிவர் விருது தமிழக திரைப்பட விருது மலேசிய விருது ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது. கோல்டன் குளோப் விருது கிராமிய விருது இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே. “உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews