உலக வரலாற்றில் இன்று: ஜனவரி 18 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 18, 2019

உலக வரலாற்றில் இன்று: ஜனவரி 18


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி


சனவரி 18 (January 18) கிரிகோரியன் ஆண்டின் 18 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள் தொகு

350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன்  கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.
474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான்.
1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார்.
1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின்  தலைநகர் லிமாவை நிர்மாணித்தார்..
1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா  இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
1701 – புருசியாவின் மன்னாராக முதலாம் பிரெடெரிக் முடி சூடினார்.
1778 – அவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக்  இதற்கு "சான்ட்விச் தீவுகள்" எனப் பெயரிட்டார்.

1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
1806 – இடச்சு கேப் குடியேற்றம் பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1824 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.[1]
1871 – வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்லெம் அதன் முதலாவது மன்னனான்.
1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.
1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.
1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சு, வேர்சாயில்  ஆரம்பமானது.
1929 – லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் போரைத் தொடங்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால்  முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட்  நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கிராக்கோவ் நகரம் செஞ்சேனையினால்  விடுவிக்கப்பட்டது.
1960 – அமெரிக்காவில் வர்ஜீனியா  மாநிலத்தில், வானூர்தி ஒன்று வயல் நிலமொன்றில் வீழ்ந்ததில் அதில் யனம் செய்த 50 பேரும் உயிரிழந்தனர்

1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
1969 – அமெரிக்க விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – இசுரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.
1976 – லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர்.
1977 – பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.
1977 – ஆத்திரேலியாவின் சிட்னியின்  புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.
1993 – அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் மார்ட்டின் லூதர் கிங் நாள்  அதிகாரபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில்  கண்டுபிடிக்கப்பட்டன.
1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
2003 – ஆத்திரேலியா தலைநகர் கன்பராவில்  இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.
2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில்  அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் செருமனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள் தொகு

1752 – ஜான் நாசு, பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1835)
1854 – குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)
1892 – ஒலிவர் ஹார்டி, அமெரிக்க நகைச்சுவை நடிகர் (இ. 1957)
1921 – நாம்பு ஓச்சிரோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)
1927 – எஸ். பாலச்சந்தர், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், வீணை இசைக்கலைஞர் (இ. 1990)
1936 – ஜோன் ரூட், கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2006)
1952 – வீரப்பன், தமிழக சந்தனக் கடத்தல்காரர் (இ. 2004)
1955 – கெவின் கோஸ்ட்னர், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1955 – எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அரசியல்வாதி
1969 – டேவ் பாடிஸ்டா, அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
1971 – அமி பர்கர், அமெரிக்க வானியலாளர்
1971 – பெப் கார்டியோலா, எசுப்பானியக் கால்பந்து வீரர்
1971 – பின்யாவாங்கா வையினையினா, கென்ய எழுத்தாளர், ஊடகவியலாளர்

1972 – வினோத் காம்ப்ளி, இந்தியத் துடுப்பாளர்
1980 – ஜேசன் செகெல், அமெரிக்க நடிகர்
இறப்புகள் தொகு

1862 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10வது அரசுத்தலைவர் (பி. 1790)
1917 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக எழுத்தாளர், மற்றும் கிறித்துவப் பாதிரியார் (பி. 1828)
1936 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு  பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1865)
1936 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசைவாதி (பி. 1865)
1955 – சாதத் ஹசன் மண்ட்டோ, பாக்கித்தானிய எழுத்தாளர் (பி. 1912)
1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
1982 – உவாங் சியான்பான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (பி. 1899)
1995 – அடால்ஃப் புடேனண்ட், நோபல் பரிசு  பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1903)
1996 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (பி. 1923)
2003 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1907)
2005 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1939)

2006 – வை. சச்சிதானந்தசிவம், ஈழத்து ஓவியர், எழுத்தாளர், குறும்பட இயக்குனர், எழுத்தாளர் (பி. 1940)
2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (பி. 1930)
2018 – காசிநாத், தென்னிந்திய கன்னட நடிகர், இயக்குநர் (பி. 1951)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews