👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விபரங்கள் அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி வகுப்புகள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. செயல்முறை திறன் இருப்பினும், கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி தீர்வாக இருந்தது. துவக்கத்தில், இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளோடு தொழிற்கல்வி பாடத்திட்டம் துவக்கப்பட்டது. தற்போது, இந்தபாடப்பிரிவுகள், பல பள்ளிகளில், முடங்கிவிட்டன. மீதமுள்ள பள்ளிகளிலும், ஐந்துக்கும் குறைவான தொழிற்கல்வி பாடங்கள் மட்டுமே உள்ளன
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ள பள்ளிகளில், அதற்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதும், அந்த பாடப்பிரிவு நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளும் கிடையாது. இதனால், பள்ளி நிர்வாகத்தினரும், தொழிற்கல்வி பாடத்தை தொடர்ந்து நடத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. உடுமலையில் நான்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூன்று அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தணிக்கையியல், இயந்திரவியல், வேளாண் பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது. அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளே அடுத்தகட்ட வாய்ப்பாக உள்ளது. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், பல பள்ளிகளில் இப்பாடத்திட்டம் நீக்கப்பட்டு விட்டன
இந்நிலையில், தற்போது, தொழிற்கல்வி பாடப்பிரிவு செயல்படும் பள்ளிகளின் விபரம் மற்றும் அந்த பாடப்பிரிவுகளில், பிளஸ்,1,2 வகுப்புகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை குறித்து, விபரங்கள் அனுப்ப, திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்