*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது
*தமிழகம் முழுவதும் குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
*வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் எனப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,199 பணியிடங்களுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்திருந்தனர்
*இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 31,349 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்
*சென்னையைப் பொருத்தவரை 247 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மையங்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்
*போலீஸ் பாதுகாப்பு
*அனைத்துத் தேர்வு மைங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீவிர சோதனைக்குப் பின்னரே, தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்
*தேர்வு மையங்களுக்குள் செல்லிடப்பேசி, கை கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை
*வீடியோ பதிவு
*தேர்வு மையங்கள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 விடியோ கிராபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்
*பதற்றமானவை எனக் கணிக்கப்பட்ட 11 மையங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன
*தேர்வு நடைபெறும் 3 மணி நேரமும் தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 400 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன
*26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை
*இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் மேர்பட்டவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்
*மேலும், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும், ஒரு வாரத்துக்குள்ளாக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எழுத உள்ளனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்