'அறிவியல் அறிவோம்': காய்கறி, பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 08, 2018

'அறிவியல் அறிவோம்': காய்கறி, பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன ?

காய்கறி, பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன ? துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம். மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. PLU என்றால் என்ன?
பி.எல்.யு (PLU) என்பது “Price Look Up” நம்பர் எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதா? மரபணு மாற்றம் செய்யபப்ட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம். நான்கு இலக்க குறியீடு.
பழத்தின் மேல் நான்கு டிஜிட் எண் மட்டும் 4011 என்று இருந்தால், (வாழைப்பழத்தின் கோட் எண் 4011) இயற்கையாக விளைந்தது என்று அர்த்தம். நான்கிற்கு முன்பு ஒரு எண் சேர்ந்து 84011 என்று இருந்தால், இயற்கையாக அல்லாமல், செயற்கை முறையில் (மரபியல் மாறி) விளைந்தது என்று பொருள். நான்கிற்கு முன்பு, 9 என்கிற எண் சேர்த்து, 94011 என்று இருந்தால், ஆர்கானிக் பண்டம் என்று அர்த்தம். குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் “4011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும். எச்சரிக்கை
F P S (International Federation for Produce Standards) மூலம் பெறப்படும், இந்த உணவுப் பண்டங்களுக்குண்டான கோட் எண்களை 1990 முதல் உலகளாவிய முறையில், கடைகளில், உபயோகப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் உள்ள மெழுகு, உண்ணப்பட்டு விட்டால், அதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது (edible gum). ஆகையால், தேவையான தின்பண்டங்களை, தெளிவுடன் வாங்கி சாப்பிடுங்கள்.
இனிமேலாவது நீங்கள் பெரும் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது எவ்வகையானது என்பதை அறிந்துக் கொண்டு வாங்குங்கள். புற்றுநோய் அபாயம்: மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நாள்பட புற்றுநோய் கட்டிகள் உடலில் உண்டாக பெரிய காரணியாக இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews