இதனால் பல பாதிப்புகள் உண்டாகும் என்று தெரிந்தும், சத்தற்ற அரிசிகளை உணவாக சமைத்து உண்ணாமல், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு முழு தானிய உணவான கைக்குத்தல் அரிசி சாதத்தை சமைத்து நோயின்றி வாழலாம்.
இப்பொழுது கைக்குத்தல் அரிசி சாதத்தின் பயன்களைப் பார்ப்போம்.
🍚
கைக்குத்தல் அரிசி சாதத்தில்
#பாஸ்பரஸ்,
#செலினியம்,
#வைட்டமின்_பி,
#மாங்கனீசு,
#பொட்டாசியம்,
#மெக்னீசியம்
போன்ற சத்துக்கள் உள்ளன.
கைக்குத்தல் அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, இது இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்களை தங்கவிடாமல் பாதுகாத்து பெருங்குடல் புற்றுநோயை வராமல் தடுக்கின்றது.
🍚
மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள, கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் (Phytonutrients Lignan) மிகவும் உதவுகிறது.
🍚
மேலும், கைக்குத்தல் அரிசியில் உள்ள எல்டிஎல் (LDL) என்ற நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.
எனவே இந்த அரிசியை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஏராளமானப் பயன்களைப் பெற முடியும்.
🍚
கைக்குத்தல் அரிசியில் எலும்புகளைப் பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.
🍚
ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசி சாதத்தில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% உள்ளது.
🍚
மேலும் எலும்புகள், கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை மெக்னீசியம் உதவியுடன் எடுத்துக் கொள்கிறது.
🍚
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து மிகவும் உதவுகிறது.
🍚
மேலும், இது உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுத்து உடல் எடையை பராமரிக்க உதவுகின்றது.
🍚
மார்பக புற்றுநோய் சம்பந்தமாக வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசி சாதம் போன்ற முழு தானிய உணவுகளைச் சாப்பிடும் போது Enterolactone அளவுகளை அதிகரித்து மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.
இதில் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்துள்ளது.
🍚
மேலும், இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
🍚
கைக்குத்தல் அரிசி மட்டுமின்றி, அரிசியின் தவிட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயிலும் மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.
🍚
நாம் சாப்பிடும் உணவில் அடிக்கடி கைக்குத்தல் அரிசி சாதத்தைச் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இரத்தக் குழலில் பிளேக் நோய் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும்.
🍚
கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலைக் குறைக்கலாம்.
🍚
மெக்னீசியம் நிறைந்துள்ள கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
🍚
மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமாவிற்கு எதிரான நன்மையினைத் தரக்கூடியது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்