தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் மற்றும் பிற பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 16, 2018

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் மற்றும் பிற பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும் என்று பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.அதேபோல் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews