வீதி நாடகங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு: நெகிழ்ச்சி ஏற்படுத்திய பள்ளிக் குழந்தைகளின் சமூக அக்கறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

வீதி நாடகங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு: நெகிழ்ச்சி ஏற்படுத்திய பள்ளிக் குழந்தைகளின் சமூக அக்கறை

மதுரையில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள், வீதிகளில் நாடகங் கள் நடத்தி பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளிக் குழந்தைகளின் இந்த சமூக அக்கறை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
மதுரையில் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு காய்ச்சல் மரணங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல்கள் மக் களை அச்சமடையச் செய்துள் ளன. அரசு, தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகூட இல்லாத அளவுக்கு வார்டுகள் நிரம்பி வழிந்தன. தற்போது ஓரளவு காய்ச்சல் குறைந்து வருகிறது. ஆனால், காய்ச்சல் மரணங்கள் தொடர்கின்றன.
பொதுமக்களிடம் காய்ச்சல் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு இல்லாததே மதுரையில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல்களின் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறையினர் ஆதங்கப் படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை மாநகராட்சி 52-வது வார்டு கீழச்சந்தைப் பேட்டை டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தினர். இந்த வீதி நாடகத்தை தலைமையாசிரியர் க.சரவணன் எழுதி இயக்கினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 18 பேர் பல்வேறு பாத்திரங்களில் நடித்து அசத்தினர்.
டெங்கு நோயின் அறிகுறிகள், கொசுவை விரட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் , கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாமல் அரசு மருத்துவமனையை நாட வேண்டிய அவசியம் , சுற்றுப்புறச் சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வுக் காட்சிகள் நாடகத்தில் இடம் பெற்றிருந்தன. இது பொதுமக்களை ரசிக்கச் செய்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. மாண வர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
மாணவர்கள் தில்லைநாயகம் , முத்துபாண்டி, சந்தனபிரகாஷ் , ஹரி, ஜெகதீஸ், ரோஷன் ஆகியோர் நோயாளியாகவும், பிரியதர்ஷினி மருத்துவராகவும், காவியா, நாகதர்ஷினி செவிலியர் களாகவும், அட்சயா, ஜீவதர்ஷினி , செல்வமணி, மருதுபாண்டி ஆகியோர் கொசுக்களாகவும் நடித்துச் சிறப்பித்தனர். தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ''பள்ளிக் கூடம் சமூகத்துடன் இணைந்து செயல் பட வேண்டும். மாணவர்களின் பங்களிப்பு சமூகத்தின் தேவை யைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாணவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வீதி நாடகம் உதவுகிறது. மக்களும் மாணவர்களின் நடிப்பை ரசிப்பதுடன் விழிப்புணர்வும் பெறுகின்றனர். அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும் சேரும்போது டெங்கு குறித்த விழிப்புணர்வு முழுமையாக மக்களைச் சென்றடைகிறது என்றார். நாடகத்தில் நடித்த மாணவி நாகதர்ஷினி கூறுகையில், வீதி நாடகம் என்றதும் கொஞ்சம் அச்சமாக இருந்தது. ஆனால், மக்கள் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தபோது ஆர்வம் ஏற்பட்டதால் சிறப்பாக நடித்தோம். எங்கள் தலைமையாசிரியர் பறை அடித்து எங்களை உற்சாகப்படுத்தினார். எனது லட்சியம் மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்பதுதான், என்றார். வீதி நாடகம் என்றதும் கொஞ்சம் அச்சமாக இருந்தது. ஆனால், மக்கள் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தபோது ஆர்வம் ஏற்பட்டதால் சிறப்பாக நடித்தோம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews