எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.), எஸ்எஸ்எல்சி தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை வழங்கி வருகிறது. தற்போது வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மதிப்பெண் பட்டியலை லேமினேட் செய்து தருவதோடு கே.எஸ்.இ.இ.பி. தனது பணியை முடித்துக் கொள்கிறது. ஆனால், லேமினேட் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல் எதிர்காலத்தில் பாழாவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் முக்கியமான ஆவணமாக கருதப்படுவதால், அதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த கே.எஸ்.இ.இ.பி. 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு எளிதில் கிழிக்க முடியாத, நீரில் பாழாகாத, தீயில் சுட்டுப்போகாத மதிப்பெண் பட்டியலை வழங்கதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கே.எஸ்.இ.இ.பி. இயக்குநர் வி.சுமங்கலா கூறியது: எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் எல்லா மாணவர்களுக்கும் விலைமதிப்பில்லாதது மட்டுமல்லாது முக்கியத்துவம்வாய்ந்ததாகும். மாணவர்கள் முதல்முறையாக எழுதும் பொதுத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலாகும்.
எனவே, 2018-19-ஆம் கல்வியாண்டில் எளிதில் கிழியாத, நீரில் கசங்காத, தீக்கு இரையாகாத மதிப்பெண் பட்டியலை வழங்க யோசித்துவருகிறோம்.
இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் மதிப்பெண் பட்டியலில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிய திட்டமிட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்தவுடன், அதை சோதனைக்குள்படுத்தி, சிறந்த முறையில் பின்பற்றப்படும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக முடிவெடுத்தவுடன் மதிப்பெண் பட்டியல் தயாரிப்புக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோம்.
வாரியத்துக்கு மாநில அரசிடம் இருந்து நிதி ஆதாரங்கள் கிடைப்பதில்லை. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணங்களில் இருந்துதான் மதிப்பெண் பட்டியலுக்கும் செலவிடப்படுகிறது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதால், கூடுதல் செலவு ஆகும். எனவே, செலவை சமாளிக்க எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் நிகழாண்டிலே அறிமுகப்படுத்தாமல், ஆண்டுக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவோம் என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்