அறிவியல்-அறிவோம்: "பெர்முடா முக்கோணம் மர்மங்களின் பகுதி" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 24, 2018

அறிவியல்-அறிவோம்: "பெர்முடா முக்கோணம் மர்மங்களின் பகுதி"

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். அமைவிடம் : பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) - வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு பகுதியில் உள்ள மர்மமான கடல் பரப்பாகும். பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம்..! இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது. 1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.
மர்மங்களும் ஆய்வுகளும்: ஆர்கியாலஜிஸ்ட் (Edgar Cayce 1968 )எட்கர் கெயிஸ் கடலில் மூழ்கி அழிந்துபோன அட்லாண்டிஸ் நிலப்பரப்பின் மலை முகடு பெரிய சுவர் போல பைமினிக்கு அருகில் அதாவது பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் இருப்பதாக கண்டுபிடித்தார். பாகாமாஸில் மேலும் பல தடயங்கள் அழிந்து போன அட்லாண்டிஸ் நகரத்தை பற்றி கூறுகிறது. அட்லாண்டிஸ் நகரத்தில் இருந்தவர்கள் மேலான அறிவு மிக்கவர்கள் அவர்களிடம் சக்தி மிக்க கிரிஸ்டல் இருந்ததாகவும், இன்னும் இவை தான் சக்தி அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே ஏரியா 51 எனும் இபபகுதிக்குள் நுழையும் எவையும் (விமானம், கப்பல்கள்) எவ்வித சுவடும் இன்றி மறைந்து விடுவதாக நம்பப்பட்டது. இப்பகுதி ஏலியன்ஸ் வந்து போகும் தள மாக செயல்படுவதாகவும் இங்கு எப்போதும் கண்ணுக்கு தெரியாத அதிக டிராபிக் இருப்பதாகவும் இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 கப்பல்களும் 20 விமானங்களும் காணாமல் போன தாகவும் 1000 பேர் கடந்த 500 ஆண்டுகளில் தொலைந்து போனதாகவும் U.S. நேவி மற்றும் கடலொர பாதுகாப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நீல நிற பெருஞ் சுழற்குழிகள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் ராப்மெக்கெரிகர், புரூஸ்கெனான் இதையே எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் (electronic Fog) என சொல்கின்றனர். 1945ல ஃப்லைட் 19 எனும் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் இருக்கும் போது இப்பகுதியில் காணாமல் போய்விட்டது அதில் 19 பேர்கள் இருந்ததாகவும் இதை தேடி சென்ற 14 பேர் அடங்கிய குழு 5 டார்பிடோக்களும் அதே பாணியில் மறைந்து விட்டதாகவும் ஒரு ரிக்கார்டு இருக்கிறது. மேலும் இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்கு வேற்று கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கும் என்ற கற்பனையும் உலவுகிறது.
இப்பெரிய பரப்பில் நீர்மேல் பகுதிகளிலும் வானப்பகுதிகளிலும் மீத்தேன் வாயுக்கள் அடர்த்தி அதிகமா இருப்பதால் நீர் பரப்பை மிக லேசாக்கி இதனுள் செல்லும் கப்பல்களை மூழ்கடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் திசைமானிகள் ஒழுங்காண திசை காட்டுவதில்லை. சில இடங்களில் கர கரவென சுழழுவதாக கூறுகிறார்கள். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து பார்க்கப்ட்டதில், காந்த புல மாறுதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பூமியில் இரண்டு இடங்களில் மட்டுமே காந்த புல மாற்றம் உள்ளது ஒன்று சரியான பூமியின் வடக்கு பகுதி மற்றொன்று காந்தபுல வடக்கு நேர் கோட்டுப்பகுதி. இந்த இடங்களில் மட்டுமே திசைகாட்டி [காம்பஸ்] தவறுகிறது. சக்திவாய்ந்த எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலினுள் மெக்சிகோவில் தொடங்கும் கல்ப்நீரோட்டம் புளோரிடா கணவாயினூடாக வட அட்லாண்டிக் வரை செல்கிறது. இதன் அகலம் 40 முதல் 50 மைல் தொலைவு பரந்துபட்டது. மேலும் இதன் வேகம் மிக அதிகம். தட்ப வெப்பநிலை மாற்றம் நிகழ்த்துவது இந்த வெப்ப நீரோட்டம். பெர்முடா முக்கோணப்பகுதியில் 28000 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் சுழல், 80 அடி உயரே எழும்பும் பிரம்மாண்ட அலைகள் இப்பகுதியினுள் நடப்பவகைகளை மறைக்கின்றன. சாட்டிலைட் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இப்பகுதியில் நிலையற்ற காலநிலைமாற்றம் நிலவுகிறது. கரீபியன் அட்லாண்டிக் கூம்பு புயல் எப்போது வேண்டுமானலும் சுற்றி சுழன்று வரும்.
விலகும் மர்மம்: பல ஆண்டுகளாகவே கண்டுபிடிக்க முடியாதிருந்த ‘பெர்முடா முக்கோணம்’ பகுதியின் மர்மம் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. செவ்வாய் கிரகம் வரை ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கும் உலக வல்லரசுகளால் கூட இந்த பகுதியில் எந்த வாகனத்தையும் செலுத்த முடியவில்லை. இந்த முக்கோணத்தின் பரப்பளவும் நிலையாக இருப்பதில்லை. 13 முதல் 39 லட்சம் சதுர கிலோமீட்டர் வரை மாறியபடியே உள்ளது. அதாவது, அந்த பகுதிக்கு செல்லும்போது, ஒரு முறை பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலேயே அடுத்த முறையும் பாதிப்பு ஏற்படும் என்று நம்ப முடியாது. முதன்முறை பாதிப்பை சந்தித்த இடத்தை விட சில நூறு கிலோமீட்டர்கள் முன்னதாகவே இரண்டாவது முறை பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்டாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியரான டாக்டர் சைமன் போக்ஸால் தலைமையிலானா குழு ஒன்று பெர்முடா முக்கோணத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. அவர்களின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், ஃபுளோரிடா, பெர்முடா புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதி ஆழமாக இருப்பதும், அங்கு சுமார் 100 அடி உயரம் வரை அலைகள் எழுவதும் தெரியவந்துள்ளது. புயல் காலங்களில், அதிகபட்சம் 10 முதல் 15 மீட்டர் உயரம் வரைதான் கடல் அலைகள் எழும். ஆனால் இந்த பகுதியில் சராசரியாகவே 100 அடி வரை அலை எழுகிறது.
இத்தகைய ராட்சத அலைகள், கிட்டத்தட்ட சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அந்தப் பகுதியில் எந்த கப்பலாலும் கடக்க முடிவதில்லை. இத்தகைய சிக்கலான கடற்பகுதியில் எவ்வளவு பெரிய கப்பல்கள் சென்றாலும் அதனால் முழுமையாக கடக்க முடியாது. மேலும் இந்த அலைகள் ஏற்படுத்தும் அழுத்தத்தை எந்த கப்பலாலும் தாங்கவும் முடியாததால், கப்பலின் பாகங்கள் நொறுங்கி விடுகின்றன. இதுதவிர, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலையும் விமானங்கள் பறப்பதற்கு ஏற்றதாய் இல்லை. இதனால், அந்த வழியே பறக்கும் விமானங்கள் செயலிழந்து கடலில் விழுந்துவிடுகின்றன. இதற்கு காரணம் அந்த கடற்பகுதியின் நில அமைப்புதான் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews