நவம்பர் 6 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை  தேசிய சித்தா தின கொண்டாட்டம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியது மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 08, 2018

நவம்பர் 6 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை  தேசிய சித்தா தின கொண்டாட்டம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியது மத்திய அரசு

சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, 50 நாட்கள் தேசிய சித்தா தினம் கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற பல பழமையான மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.
சித்த மருத்துவத்தை,18 சித்தர்கள் தோற்றுவித்ததாக வரலாறு கூறு கிறது. சித்த மருத்துவத்தின் முன்னோடியும், 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகத்திய முனிவர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாள், ஆண்டுதோறும் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாவது தேசிய சித்தா தினம் வரும் நவ. 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ம் தேதி வரை 50 நாட்களுக்கு கொண் டாடப்பட உள்ளது. இதற்காக, ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதில், சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சமும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ரூ. 30 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சித்தா தினத்தையொட்டி இரு அமைப்புகளும் கருத்த ரங்கம், மருத்துவ முகாம், கண் காட்சி போன்றவற்றை நடத்தி சித்த மருத்துவம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.
இதுகுறித்து தேசிய சித்த நிறுவன இயக்குநர், மருத்துவர் வெ.பானுமதி கூறியதாவது: அகத் தியர் பிறந்த ஆயில்ய நட்சத்திர தேதி ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர், 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சித்த மருத்துவ கண்காட்சி, கருத்தரங்கம், விழிப் புணர்வு பேரணி, சிறப்பு மருத் துவ முகாம், துண்டுப் பிரசுர விநியோகம், சமூக வலைத்தளங் களில் பிரச்சாரம், நவதானிய உணவு முறை, சித்த மருந்து தயாரிக் கும் முறை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. டிச. 26-ல் கருத்தரங்கங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews