3 கோடி முறை பார்வையிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறை யூ டியூப் சேனல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 19, 2018

3 கோடி முறை பார்வையிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறை யூ டியூப் சேனல்

கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதாகப்புரிய வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை மூலம் உருவாக்கப்பட்ட யூ டியூப் சேனல் 3 கோடி தடவைக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் ஆகியவற்றுக்கான விடியோக்களை பள்ளிக் கல்வித்துறை அதிகளவில் பதிவேற்றம் செய்து வருகிறது. மாணவர்கள் மத்தியில் நிலவிவரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் வகையிலும், கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் வகையிலும், தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி யூ டியூப் தளத்தைத் தொடங்கியது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில் தொடக்கப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்காக மழலையர் பாடல்கள் மட்டும் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதற்கு அதிக வரவேற்புக் கிடைத்ததால் இந்தத் தளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதுமையான வகையில் வகுப்பெடுக்கும் 100 ஆசிரியர்கள், பாடநூல்களை எழுதியவர்களைக் கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்கள் மூலம் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்பட அனைத்து முக்கிய பாடங்களிலும் உள்ள கடினமான பகுதிகளுக்கு விளக்கமளிக்கும் காணொலிகள் ("விடியோக்கள்') சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தயார் செய்யப்பட்டு எஸ்சிஇஆர்டி யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாக எளிமையான விளக்கங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். கற்கும் திறனில் பின்தங்கிய மாணவர்கள், பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள், முழு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் என பலருக்கும் இக்காணொலிகள் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.
வகுப்புகளுக்கு ஏற்ப பாடப் பிரிவுகளுக்கும், அதற்கான விளக்கமும் இந்த தளத்திலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர்களின் மொழி வசதிக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தக் விடியோக்கள் இருப்பது இதன் வெற்றிக்கு ஓர் முக்கியப் பங்காகும். இதுவரை ஒரு லட்சம் பேர் இந்த சேனலைக் காண விருப்பம் தெரிவித்துள்ளனர். போட்டித் தேர்வு- புதிய பாடத்திட்டம்: இந்நிலையில் நிகழாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பிளஸ் 1 பாடங்கள் தொடர்பான விளக்கங்கள், நீட்- ஜேஇஇ போட்ட போட்டித் தேர்வுகளுக்கான காணொலிகள் தற்போது புதிதாகவும், அதிகளவிலும் இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
இந்தத் தளத்தில் இதுவரை 3,028 காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை மூன்று கோடி முறைக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17 லட்சம் பேரும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4.70 லட்சம் பேரும் பார்வையிட்டுள்ளனர். காணொலிக்கு கீழே பதிவாளர்கள் இடும் பின்னூட்டங்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகிறது. 600-க்கும் மேற்பட்ட புதிய விடியோக்கள்: நீட், ஜேஇஇ, டிஎன்பிஎஸ்சி போன்ற பொது நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்தே 50 சதவீத கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இத்தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொண்டிருப்பவர்களுக்கு எளிமையாக பச நஇஉதப யூ டியூப் தளத்தில் கேள்வி- பதில்களும் உள்ளன. இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் கணிதம்-197, இயற்பியல்- 124, தாவரவியல்- 92, கணினி அறிவியல் 22 என பல்வேறு பாடங்கள், போட்டித் தேர்வுகள் சார்ந்து 600-க்கும் மேற்பட்ட விடியோக்கள் புதிதாக பதிவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான மாணவர்களுக்கு தனிப்பயிற்சி வகுப்புக்கு செல்வதே சிரமமான செயலாக இருக்கும். பலர் கட்டாயத்தின் அடிப்படையிலேயே சென்று வருவர். ஆனால் செல்லிடப்பேசி பயன்படுத்துவது தற்போது வாடிக்கையான ஒன்றாகிவிட்ட நிலையில் இந்த சேனல் மூலம் மாணவர்கள் எளிதில் பாடம் கற்க முடியும். மேலும் தனிப் பயிற்சிக்காக ஒதுக்கப்படும் செலவுகளும் தவிர்க்கப்படும்.
பெற்றோரிடம் விழிப்புணர்வு அதிகரிக்குமா? இந்த சேனல் குறித்து அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோரின் செல்லிடப்பேசிகளில் ஆண்ட்ராய்டு வசதி இருப்பதால் பச நஇஉதப சேனல் குறித்து குழந்தைகளுக்கு கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews