ஆயுஷ் மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்வில் யோகா, ஓமியோபதியில் 245 இடங்கள் காலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

ஆயுஷ் மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்வில் யோகா, ஓமியோபதியில் 245 இடங்கள் காலி

ஆயுஷ் மருத்துவப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் 245 இடங்கள் காலியாக உள்ளது ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பித்தல் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி, நவம்பர் 12ம் தேதி முடிந்தது
ஆறு அரசுக்கல்லூரிகளில் 390 இடங்களும், 23 தனியார் கல்லூரிகளில் 1,470 இடங்களும் உள்ளன இவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்த அரசுக்கு சரண்டர் செய்த இடங்கள்(பாதி இடங்களுக்கு மேல்) இதற்கு விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியுள்ள 3,471 பேர் கொண்ட தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது அதைத்தொடர்ந்து தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு, கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது
இந்நிலையில், முதல்கட்ட கலந்தாய்வின் அரசுக்கல்லூரிகளில் எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன தனியார் கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் 187 இடங்களும், ஓமியோபதி பாடப்பிரிவில் 58 இடங்களும் காலியாக உள்ளன தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேராததற்கு என்ன காரணம் என்று சித்த மருத்துவர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது தமிழகத்தில் பொதுமக்களிடையே ஆயுஷ் மருத்துவ படிப்புகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை
இதுதவிர தனியார் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவப்படிப்புகளில் சேர மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது அந்த படிப்புகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் போதுமான வேலைவாய்ப்பு உள்ளதால் தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி படிக்கவும் மாணவர்கள் தயாராக உள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு சித்த மருத்துவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews