உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 14 (November 14 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 14, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 14 (November 14 )





நவம்பர் 14 (November 14 ) கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1579 – "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர்
என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
1751 – இரண்டாம் கர்நாடகப் போர் : பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் : அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன்
கூட்டமைப்பின் தலைநகர்
ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார்.

1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.
1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918 – செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.
1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
1940 – இரண்டாம் உலகப் போர் :
இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம்
செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்:
வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.
1941 – இரண்டாம் உலகப் போர்:
பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.
1963 – ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த
எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
1965 – வியட்நாம் போர் : லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.

1967 – அமெரிக்க இயற்பியலாளர்
தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான
காப்புரிமத்தைப் பெற்றார்.
1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின்
அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 – சோவியத் ஒன்றியம்
பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பில் இணைந்தது.
1970 – மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.
1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே
பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச்
செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
1975 – மேற்கு சகாராவை விட்டு
எசுப்பானியா விலகியது.
1978 – பிரான்சு ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.
1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1990 – கிழக்கு செருமனி மற்றும்
மேற்கு செருமனிகளின்
இணைப்பிற்குப் பின்னர்
போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர்
நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.
1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2001 – ஆப்கானித்தானின் தலைநகர்
காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
2003 – 90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 – நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்
1650 – மூன்றாம் வில்லியம் , இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (இ. 1702)
1765 – ராபர்ட் ஃபுல்டன் , நீராவிக் கப்பலைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ.
1815 )
1840 – கிளாடு மோனெ , பிரான்சிய ஓவியர் (இ. 1926 )
1889 – ஜவகர்லால் நேரு , இந்தியாவின் 1வது பிரதமர் (இ. 1964 )
1891 – பீர்பால் சகானி, இந்திய தாவரவியலாளர் (இ. 1949)
1907 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் , சுவீடிய எழுத்தாளர் (இ. 2002 )

1922 – தி. கோ. சீனிவாசன் , தமிழக எழுத்தாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (இ. 1989 )
1922 – புத்துருசு புத்துருசு காலீ , ஐநாவின் 6வது பொதுச் செயலர் (இ. 2016 )
1924 – பாறப்புறத்து, மலையாள சிறுகதை, புதின எழுத்தாளர் (இ.
1981 )
1926 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (இ. 1983 )
1930 – எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967 )
1931 – இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
1942 – இந்திரா கோஸ்வாமி , அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர் (இ.
2011 )
1947 – பி. ஜெ. ஓரூக் , அமெரிக்க ஊடகவியலாளர்
1948 – சார்லசு, வேல்சு இளவரசர்
1954 – காண்டலீசா ரைஸ், அமெரிக்க அரசியல்வாதி
1957 – ஆர். பார்த்திபன் , தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
1971 – அடம் கில்கிறிஸ்ற், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1972 – ஜோஷ் டுஹாமெல் , அமெரிக்க நடிகர்

இறப்புகள்

565 – முதலாம் ஜஸ்டினியன் , பைசாந்தியப் பேரரசர் (பி. 482 )
683 – முதலாம் யசீத் , உமையா கலீபா (பி. 647)
1263 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசியப் புனிதர் (பி. 1221 )
1682 – ரைக்லாவ் வொன் கூன்சு , ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619 )
1916 – சாகி , பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870 )
1920 – சுபோத் சந்திர மல்லிக் , இந்தியத் தொழிலதிபர், பல்லூடகவாதி (பி. 1879 )
1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646 )
1831 – எகல் , செருமானிய மெய்யியலாளர் (பி. 1770 )
1916 – சாகி , பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870 )
1938 – ஆன்சு கிறிட்டியன் கிராம் , தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (பி. 1853 )
1938 – மகாத்மா அன்சுராசு, ஆரிய சமாசத் தலைவர், கல்வியாளர் (பி.
1864 )
1977 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா , கிருஷ்ண பக்திக் கழக நிறுவனர் (பி. 1896)
1987 – ஏ. எல். அப்துல் மஜீத் , கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி.
1933 )

2013 – ஓம் முத்துமாரி , தமிழகக் கிராமியக் கூத்துக்கலைஞர்
2015 – கே. எஸ். கோபாலகிருஷ்ணன் , தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1929 )

சிறப்பு நாள்
உலக நீரிழிவு நாள்
குழந்தைகள் நாள் ( இந்தியா )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews