மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறியுறுத்தலின் படி பள்ளி முன் பருவ வகுப்புகளை தொடங்கும் முயற்ச்சிகளை தமிழக பள்ளி, கல்வித்துறை தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால் இது வரை 1ஆம் வகுப்பில் தான் சேர்க்க முடிந்தது.
அந்த நிலையை PreKG ஆக்குவதற்காக முயற்சியை பள்ளி, கல்வித்துறை அங்கன்வாடிகள் மூலமாக செயல்படுத்த உள்ளது. பூத்து சிரிக்கும் மலர்களைப் போல துள்ளி குதிக்கும் பிஞ்சுகளின் பாதங்கள் இனி அரசு பள்ளிகளிலும் விளையாடும் என்கிறது பள்ளி, கல்வித்துறை. அதன் முதல் படியாக அங்கன்வாடிகள் உட்பட எல்லா வித தொடக்க பள்ளிகளிலும், பள்ளி முன் பருவ வகுப்புகளுக்கு ஒரே பாட திட்டத்திற்கான வரைவை மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பள்ளி முன் பருவ பாடத்திட்டத்தின் படி 2 முதல் 3 வயதிலான குழந்தைகள் PreKG வகுப்பில் சேர்க்கப்படுவர். 3 முதல் 4 வயதிலான குழந்தைகள் LKG வகுப்பிலும் 4 முதல் 5 வயதிலான குழந்தைகள் UKG வகுப்பிலும் சேர்க்கப்படுவர். வகுப்புகள் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:45 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11:00 முதல் 11:10 மணி வரை சிற்றுண்டி நேரமும், மதியம் 12:10 முதல் 1:00 வரை மத்திய உணவு நேரமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற்பகல் 1:00 முதல் 3:00 வரை உறங்குவதற்கு, 3:00 முதல் 3:20 வரை விளையாட்டு மற்றும் சிற்றுண்டி நேரமும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தனியார் பள்ளிகள் மட்டும் இன்றி அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள பள்ளி முன்பருவ வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டுள்ள இத்தகைய வரையறைகள் 2 வயது முதலான குழந்தைகளுக்கு ஏற்றது தான என கேள்வி எழுப்புகின்றனர் கல்வியாளர்கள்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கான நுழைவு வகுப்பு 1 ஆம் வகுப்பில் இருந்து PreKG ஆக்கப்படுமா. 9:30 மணி முதல் 4 மணி பள்ளி என்பது 2வயதான குழந்தைகளுக்கு சாத்தியமா போன்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.
இது குறித்து பள்ளி, கல்வித்துறையிடம் கேட்டபோது 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மணி நேரங்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று நேரத்தை பெற்றோர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்