*பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான புதிய வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது
*இதன்படி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டப்படிப்புடன், தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்
*இந்தப் புதிய வழிகாட்டுதல் 2018 -ஐ, கடந்த ஜூலை மாதம் அரசிதழிலும் யுஜிசி வெளியிட்டது. தற்போது, இந்த வழிகாட்டுதலை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தி, சுற்றறிக்கையை யுஜிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது
*புதிய விதிமுறை என்ன?
*புதிய வழிகாட்டுதலின்படி , கல்லூரி-பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான நேரடி தேர்வுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நெட் அல்லது செட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்
*இருந்தபோதும், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களுக்கும், 2009 ஜூலை 11 -ஆம் தேதிக்கு முன்பாக பிஎச்.டி. படிப்புக்கு பதிவு செய்து (சேர்ந்து) பின்னர் முடித்தவர்களுக்கும் நெட் அல்லது செட் கட்டாயம் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்