அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை அரசு விடுமுறை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மொஹரம் விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை விடுமுறை என முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார். வரும், ஏழாம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.