விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு…!!! அப்பகுதி மக்களின் அன்பின் வெளிப்பாடு…!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 29, 2018

விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு…!!! அப்பகுதி மக்களின் அன்பின் வெளிப்பாடு…!!!

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் தங்கள் ஊரில் பாராட்டு விழா எடுத்து அசத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ஆரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வட்டார வளமைய பயிற்றுநர்களான கண்ணன்,ரெத்தினசபாபதி,ஓய்வு பெற்ற மாங்குடி பள்ளி தலைமையாசிரியர் கண்ணன்,மற்றும் பெருஞ்சுனை தலைமைஆசிரியை புனிதாமேரி,மாங்குடி தலைமை ஆசிரியை மஞ்சுளா,தலைமைஆசிரியர்கள் கண்ணன், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் விழாவில், அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன், அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பிரசன்னா வெங்கடேஷ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு ,அகில் இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் வைர.ந.தினகரன், கூடலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அ.செபாஸ்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் தமிழையும் தமிழ்மண்ணையும் நேசிக்கும் நான் எனது பள்ளியை,எனது கிராமத்தை தூய்மை கிராமமாகவும் நமது தமிழ்நாட்டை தூய்மை தமிழகமாகவும் மாற்றிட நான் என்றென்றும் முயற்சி செய்வேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனுடனே பள்ளி வளாகத்தை தூய்மைப் படுத்தும் பணியை அன்னவாசல் வட்டாரகல்வி அலுவலர் அரு.பொன்னழகு தானே முன்னின்று தொடங்கி வைத்துச் சிறப்பு விருந்தினர்கள், ஊர்ப்பொதுமக்கள் அனைவரையும் தூய்மைப் பணியில் ஈடுபடச் செய்து பள்ளி வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தவர், விழாவினை குத்துவிளக்கேற்றி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,
“ஆசிரியர் தினவிழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்று அன்னவாசல் ஒன்றியத்திற்கும் ஆரியூர் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த தலைமை ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.நல்லாசிரியர்கள் என்பவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உழைப்பது போல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உழைக்க வேண்டும்.ஓர் அரசுப்பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் எனில் ஊர்ப்பொதுமக்கள்,முக்கிய பிரமுகர்கள்,கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்..பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தால் மட்டும் போதாது. பள்ளியின் மேல் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாணவர்கள் நன்றாகப் படிக்க, நன்கு வளரப் பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பது மட்டும் போதாது.நல்ல பழக்க வழக்கங்களைப் பெற்றோர்களாகிய நீங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி உயர வேண்டும் எனில் பெற்றோர்களாகிய நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும்” என்றார்.அங்குள்ள பொதுமக்களில் ஒருவர் கூறியதாவது,”எங்கள் ஊர் அரசுப் பள்ளி ஆசிரியருக்குத் தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் விருது கிடைத்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews