டிசம்பர் -1 முதல் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் "வங்கிக்கணக்கில் வரவு திட்டம்" - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 06, 2018

டிசம்பர் -1 முதல் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் "வங்கிக்கணக்கில் வரவு திட்டம்"


திருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி ரெக்டர் லியோனார்ட் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.கலெக்டர் ராசாமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், ஜேசு சபை தலைவர் டேனிஸ் பொன்னையா முன்னிலை வகித்தனர்.

 விழாவில், 175வது ஆண்டு விழா மலரை வெளியிட்டு, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: யு.ஜி.சி., துவங்கப்பட்ட போது, 20 பல்கலைக்கழகங்கள், 500 கல்லுாரிகள் இருந்தன. தற்போது, 900 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லுாரிகளும் உள்ளன.நாடு சுதந்திரம் பெற்ற பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டது. பணம் இல்லாததால் கல்வியை தொடர முடியவில்லை என்ற நிலை, எந்தவொரு மாணவனுக்கும் ஏற்படக்கூடாது என்பதில், பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். இதற்காகத் தான் பல லட்சம் மாணவர்கள் பலன் பெறும் வகையில், கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை, மாணவர்களை சென்றடைவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்க, டிச., 1ம் தேதி துவங்கி, ஒவ்வொரு மாதமும், அந்த மாணவனின் வங்கிக் கணக்கில், உதவித்தொகையை வரவு வைக்கும் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் தலா, 20 லட்சம் ரூபாய் செலவில், 2,500, 'அடல்'ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், 2,500 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews