உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 15 ( October 15 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 15, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 15 ( October 15 )





அக்டோபர் 15 ( October 15 ) கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை . 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். 1529 – வியென்னா நகர் உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். 1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1793 – பிரெஞ்சுப் புரட்சி : பிரான்சின் பதினாறாம் லூயியின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் பாரிசு நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாள். அடுத்த நாள் இவள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். 1815 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள செயிண்ட் எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர் : முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் ( ஹன்லி ) ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது. 1878 – மின்குமிழ் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார். 1917 – முதலாம் உலகப் போர்: செருமனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள். 1932 – டாட்டா ஏர்லைன்சு விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1934 – சீன சோவியத் குடியரசு கலைந்தது. சங் கை செக்கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, கம்யூனிஸ்டுகள் வெளியேறினர். 1940 – காத்தலோனியாவின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு எசுப்பானிய அரசினால் தூக்கிலிடப்பட்டார். 1944 – இட்லரின் நாட்சிக் கட்சிக்கு ஒப்பான "அம்புக் குறுக்குக் கட்சி'" அங்கேரியில் ஆட்சியைப் பிடித்தது. 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார். 1953 – பிரித்தானியா டோட்டெம் 1 என்ற தனது அணுகுண்டு சோதனையை தெற்கு ஆஸ்திரேலியா நிகழ்த்தியது. 1954 – வட அமெரிக்காவில் ஏசெல் சூறாவளி தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 1956 – போர்ட்ரான் என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 – பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது. [1] 1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென

கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1970 – மெல்பேர்ண் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட மேற்கு வாசல் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1997 – நாசாவின் இயூஜென்சு விண்ணுளவி சனிக் கோளை நோக்கி ஏவப்பட்டது. 2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் வியாழனின் ஐஓ சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது. 2003 – சீனா முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. 2006 – அவாயில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள், மின்சார நிறுத்தம், உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது. 2013 – பிலிப்பீன்சை 7.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 215 பேர் உயிரிழந்தனர். 2016 – ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட உச்சி மாநாட்டில் பங்குபற்றின.

பிறப்புகள் கிமு 70 – வேர்ஜில் , உரோமைக் கவிஞர் (இ. கிமு 19 ) 1218 – ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1265 ) 1265 – தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307 ) 1542 – அக்பர் , முகலாயப் பேரரசர் (இ. 1605 ) 1829 – ஆசப் ஆல் , அமெரிக்க வானியலாளர் (இ. 1907 ) 1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. 1900 ) 1855 – சுப்பராயலு , சென்னை மாகாண முதலமைச்சர் (இ. 1921 ) 1863 – நெவின்ஸ் செல்வதுரை , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. 1938 ) 1881 – பி. ஜி. வுட்ஹவுஸ் , ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975 ) 1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர் இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. 1975 ) 1904 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (இ. 1949) 1909 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் , அமெரிக்க வானியலாளர் (இ. 2002 ) 1913 – தெ. து. ஜயரத்தினம் , யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. 1976 ) 1924 – ஏ. பீம்சிங் , தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. 1978 ) 1926 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1984 ) 1926 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 2011 ) 1927 – பி. எஸ். அப்துர் ரகுமான் , இந்தியத் தொழிலதிபர் (இ. 2015 )

1931 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (இ. 2015 ) 1931 – வீரமணி ஐயர் , ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003) 1934 – என். ரமணி , இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. 2015) 1936 – மதன் லால் குரானா, இந்திய அரசியல்வாதி 1939 – கே. டி. பிரான்சிஸ், இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. 2013 ) 1942 – போதிநாத வேலன்சாமி , அமெரிக்க இந்து சமய ஞானி 1944 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2005 ) 1946 – யாழூர் துரை , ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. 2012 ) 1949 – பிரணாய் ராய், இந்திய ஊடகவியலாளர் 1957 – மீரா நாயர் , இந்திய-அமெரிக்க நடிகை 1995 – நிவேதா தாமஸ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை இறப்புகள் 925 – முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி , பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864 ) 1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318 ) 1564 – ஆண்ட்ரியசு வெசாலியசு , பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. 1514 ) 1764 – மருதநாயகம் , இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1725 ) 1917 – மாட்ட ஹரி , டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876 ) 1918 – சீரடி சாயி பாபா , இந்திய குரு (பி. 1838 ) 1930 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1866 )

1946 – எர்மன் கோரிங் , செருமானிய அரசியல்வாதி (பி. 1893 ) 1961 – சூர்யகாந்த் திரிபாதி , இந்தியக் கவிஞர் (பி. 1896 ) 1987 – தோமசு சங்காரா , புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1949 ) 1988 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க் , அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1909 ) 2004 – டி. ஆர். பாப்பா , தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1923 ) 2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன் , சைவத் திருமுறை ஓதுவார் (பி. 1923 ) 2009 – தெ. நித்தியகீர்த்தி , ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946) 2010 – சௌந்தரா கைலாசம் , தமிழக எழுத்தாளர் (பி. 1927 ) 2012 – நொரடோம் சீயனூக் , கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. 1922 ) சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் ( பிரேசில்) வெண்பிரம்பு பாதுகாப்பு நாள் (ஐக்கிய அமெரிக்கா) உலகக் கைகழுவும் நாள் உலக மாணவர் நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews