படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்திருப்பது ஆபத்தா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 25, 2018

Comments:0

படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்திருப்பது ஆபத்தா?


மனிதர்கள் அனைவரும் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல தங்கள் போனை சுமந்துகொண்டுதான் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். குறிப்பாக ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு ஆபத்து இந்த தலைமுறை குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதனால் செல்போன் [பற்றிய அனைத்து தகவல்களையும் மிகச்சிறிய வயதிலேயே கற்றுக்கொள்வதால் அதனை அதிகம் உபயோகிக்க தொடங்குகிறார்கள். இங்குதான் ஆபத்தே, ஏனெனில் குழந்தைகளின் மண்டை ஓடு மிகவும் மெலிதனதாக இருக்கும், மேலும் அவர்கள் மூளையின் செயல்திறனும் இப்பொழுதுதான் அதிகரிக்க தொடங்கியிருக்கும். அவர்களின் மெல்லிய மண்டை ஓட்டால் செல்போனில் இருந்து ஏற்படும் கதிரியக்கத்தை தடுக்கவோ, தாங்கவோ இயலாது. இதனால் அவர்களுக்கு பல மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம். செல்போனை தள்ளியே வைத்திருங்கள் செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெஸ்ட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள். பேண்ட் பாக்கெட்டுகளிலோ, உள்ளாடைகளிலோ வைப்பதை தவிர்க்கவும். அதிக கதிரியக்கம் உள்ளபோது பயன்படுத்தாதீர்கள் உங்கள் செல்போன் எப்பொழுதெல்லாம் அதிக கதிரியக்கத்தை வெளிவிடும் என்றால் சிக்னல் ஒன்று அல்லது இரண்டு கோடுகள் மட்டும் இருக்கும்போது, வேகமாக செல்லும் வாகனத்தில் நீங்கள் இருக்கும்போது, வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போது, பெரிய அளவிலான தரவுகளை அனுப்பும்போது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் போன் அதிக கதிரியக்கத்தை வெளிவிடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் செல்போனை விட்டு தள்ளியே இருங்கள் படுக்கைக்கு அருகில் செல்போனை வைக்காதீர்கள் இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும். பேசாத போது ஹெட்செட்டை உபயோகப்படுத்த வேண்டாம் பலரும் இப்பொழுது பயணங்களில் மட்டுமின்றி சாலைகளில் நடக்கும்போதும் ஹெட்செட்டை உபயோக்கிறார்கள். ஹெட்செட்டை நீங்கள் உபயோகிக்காத போதும் அவை செல்போனுடன் இணைந்திருந்தால் கதிரியக்கங்களை வெளியிட கூடியது. எனவே தேவையற்ற நேரங்களில் ஹெட்செட்டை கழட்டி வைக்கவும். பாதுகாப்பு கவசம் சிலர் செல்போன் கதிரியக்கத்தை குறைக்கும் ” ரேடியேஷன் ஷீல்டு ” என்னும் கவசத்தை உபயோகிக்கிறார்கள். ஆனால் இவை எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது சொல்லப்போனால் அதிக பாதிப்புகளையே ஏற்படுத்தும். செல்போனில் இருந்து வரும் கதிரியக்கங்கள் அவற்றை தடுக்கும்போதுதான் அதிகம் பரவுகிறது என்று அமெரிக்க கதிரியக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தூக்கமின்மை செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அது வெளிவிடும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். இதனால் இரவில் நீங்கள் அடிக்கடி விழித்துக்கொள்ள நேரலாம்.



👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews