உலக வரலாற்றில் இன்று செப்டம்பர் 24 ( September 24 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 24, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று செப்டம்பர் 24 ( September 24 )



செப்டம்பர் 24 ( September 24 )
கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 268 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது.
1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன்
விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது. [1]
1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை
பிரித்தானியாவிடம் கையளித்தான்.
1852 – நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது
வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.
1853 – மெலனீசியாவில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளை
பிரான்சு கைப்பற்றியது.
1869 – ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க
அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
1890 – இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறித்து சபை பலதுணை மணத்தைக் கைவிட்டது.
1898 – அமெரிக்க மிசன்
யாழ்ப்பாணம் , இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை மரு. இசபெல்லா கர் தலைமையில் அமைத்தது. [1]
1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1932 – பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு
மகாத்மா காந்தி , அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
1946 – கதே பசிபிக் நிறுவனம்
ஆங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – ஹொண்டா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1950 – காட்டுத்தீ கனடா, மற்றும்
புதிய இங்கிலாந்தின் பெரும் பகுதியை மூடியது. நீல நிலவு ஐரோப்பா வரை தெரிந்தது.
1960 – அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் "என்டர்பிரைசு" அமைக்கப்பட்டது.
1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
1972 – இலண்டனில் இருந்து புறப்பட்ட யப்பான் ஏர்லைன்சு 472 வானூர்தி மும்பை
சாண்டாகுரூசு வானூர்தி நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜூகு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கி பெரும் சேதமடைந்தது. 11 பேர் காயமடைந்டஹன்ர்.
1973 – கினி-பிசாவு
போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.
1996 – ஐக்கிய நாடுகள் அவையில் 71 நாடுகளின் பிரதிநிதிகள்
முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
2007 – பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2013 – தெற்குப் பாக்கித்தானில் 7.7-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 327 பேர் உயிரிழந்தனர்.
2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.
2015 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர், 934 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1501 – கார்டானோ , இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (இ. 1576)
1534 – குரு ராம் தாஸ் , 4-வது
சீக்கிய குரு (இ. 1581 )
1564 – வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1620)
1777 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் அரசர் (இ. 1832 )
1861 – பிகாஜி காமா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
1887 – விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு , இந்தியாவின் தலைமை ஆளுநர், வைசிராய், பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1952 )
1896 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1940 )
1898 – சார்லட்டி மூர் சிட்டர்லி , அமெரிக்க வானியலாளர் (இ. 1990 )
1902 – அயதுல்லா கொமெய்னி , மதத்தலைவர், அரசியல்வாதி, ஈரானின் 1வது அரசுத்தலைவர் (இ.
1989 )
1929 – ஏ. வி. பி. ஆசைத்தம்பி , தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 1979 )
1930 – யோன் யங் , அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2018 )
1936 – சிவந்தி ஆதித்தன் , இந்தியத் தொழிலதிபர் (இ. 2013)
1937 – பாரதி மணி , தமிழக எழுத்தாளர், நடிகர்
1941 – தெ. ஞானசுந்தரம் , தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர்
1946 – மரியா தெரசா உரூசு , சிலி வானியலாளர்
1950 – மொகிந்தர் அமர்நாத், இந்தியத் துடுப்பாளர்
1976 – ஸ்டீபனி மக்மஹோன் , அமெரிக்க மற்போர் வீராங்கனை
1985 – இலினோர் காட்டன், கனடிய-நியூசிலாந்து எழுத்தாளர்
1989 – பியா உர்ட்சுபாக் , பிலிப்பீனிய அழகி

இறப்புகள்
366 – லிபேரியஸ் (திருத்தந்தை)
1572 – டூப்பாக் அமாரு ,
இன்காக்களின் கடைசிப் பேரரசர்
1834 – பிரேசிலின் முதலாம் பெட்ரோ (பி. 1798 )
1904 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்,
நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (பி. 1860 )
1964 – பம்மல் சம்பந்த முதலியார் , தமிழ் நாடகாசிரியர், வழக்கறிஞர், மேடை நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1873 )
2003 – எட்வர்டு செயித், பாலத்தீனியப் போராளி, பத்திரிகையாளர் (பி.
1935 )
2004 – இராஜா இராமண்ணா , இந்திய அணு அறிவியலறிஞர் (பி. 1925)
2006 – பத்மினி , தென்னிந்திய நடிகை (பி. 1932 )
2007 – முருகேசு சுவாமிகள், இலங்கை இந்து ஆன்மீகவாதி (பி.
1933 )
2009 – நாத்திகம் இராமசாமி , இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி.
1932 )
2012 – திலகன் , மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1938 )

சிறப்பு நாள்
மரபு நாள் ( தென்னாப்பிரிக்கா )
விடுதலை நாள் ( கினி-பிசாவு , போர்த்துகலிடம் இருந்து 1973)
குடியரசு நாள் ( டிரினிடாட் மற்றும் டொபாகோ )

வெளி இணைப்புகள்
பிபிசி : இந்த நாளில்

நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்http://www.nytimes.com/learning/general/onthisday/20060924.html

கனடா இந்த நாளில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews