உலக வரலாற்றில் இன்று: ஆகத்து 31 ( August 31 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 31, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று: ஆகத்து 31 ( August 31 )




ஆகத்து 31 ( August 31 ) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது
இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.
1795 – திருகோணமலையை
ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
1798 – பிரான்சின் உதவியுடன்
அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர் : அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில்
அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.
1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு
தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 ப்ர்ர்ட் உயிரிழந்தனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது
திரைப்படம் காட்டும் கருவிக்கான
காப்புரிமத்தைப் பெற்றார்.
1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும்
ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத்
போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1940 – அமெரிக்காவின்
வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர் : செர்பியத் துணை இராணுவப் படைகள்
செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.
1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா ) விடுதலை பெற்றது.
1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.
1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.
1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.
1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.
1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.
1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 – வேல்சு இளவரசி டயானா
பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 – வட கொரியா தனது முதலாவது
செய்மதியை ஏவியது.
1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.
1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது.
2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.
2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின்
அலறல் என்ற பிரபலமான ஓவியம்
நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.
2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

பிறப்புகள்
12 – காலிகுலா , உரோமைப் பேரரச்ர் (இ. 41 )
1913 – பெர்னார்டு உலோவெல் , ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012 )
1569 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627 )
1870 – மரியா மாண்ட்டிசோரி , இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952 )
1874 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (இ. 1949 )
1896 – மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை , தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985 )
1905 – எஸ். ஆறுமுகம் , ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ.
2000 )
1907 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957 )
1913 – பெர்னார்டு உலோவெல் , ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012 )
1923 – வை. அநவரத விநாயகமூர்த்தி , ஈழத்து எழுத்தாளர் (இ. 2009 )
1919 – அம்ரிதா பிரீதம் , இந்தியக் கவிஞர் (இ. 2005 )
1944 – கிளைவ் லொயிட் , கயானா துடுப்பாட்ட வீரர்
1947 – சொம்ச்சாய் வொங்சவாட் , தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்
1949 – அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1949 – ரிச்சர்ட் கியர் , அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1955 – லாலுபாய் பட்டேல் , இந்திய அரசியல்வாதி
1956 – சாய் இங்-வென் , சீனக் குடியரசின் அரசியல்வாதி
1963 – ரிதுபர்னோ கோஷ் , இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013 )
1969 – ஜவகல் ஸ்ரீநாத் , இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1970 – யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா
1970 – ஸாக் வார்ட், கனடிய நடிகர், தயாரிப்பாளர்
1977 – ஜெஃப் ஹார்டி , அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்
1979 – யுவன் சங்கர் ராஜா , இந்திய இசையமைப்பாளர், பாடகர்

இறப்புகள்
1814 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738 )
1920 – வில்கெம் உண்ட் , செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832 )
1950 – சு. சி. பிள்ளை , இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901 )
1953 – மங்கலங்கிழார் , தமிழகத் தமிழறிஞர் (பி. 1895 )
1963 – ஜோர்ஜெஸ் பிராக் , பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882 )
1973 – ஜான் போர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894 )
1986 – ஹென்றி மூர், ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898 )
1989 – புதுவை சிவம் , புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி.
1908 )
1995 – பியான்ட் சிங் , பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922 )
1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி.
1961 )
2000 – கே. கே. பாலகிருஷ்ணன் , கேரள அரசியல்வாதி (பி. 1927 )
2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி , ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923 )
2012 – பிராங்க் பெ. மெக்டொனால்டு , அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி.
1925 )
2014 – சத்திராசு லட்சுமி நாராயணா , இந்திய இயக்குநர் (பி. 1933 )

சிறப்பு நாள்
விடுதலை நாள் ( கிர்கிசுத்தான் , சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)
விடுதலை நாள் ( மலாயா , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)
விடுதலை நாள் ( டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
தேசிய மொழி நாள் ( மல்தோவா )

வெளி இணைப்புகள்
பிபிசி : இந்த நாளில் - (ஆங்கிலம்)
நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
கனடா இந்த நாளில்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews