தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 10, 2018

Comments:0

தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்




தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவைச்சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ். ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், செல்வநிலை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சான்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக பொதுமக்கள் சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாமலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ‘UMANG’ என்ற ஆப்பை போனில் டவுன்லோடு செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை மற்றும் சான்றிதழ் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘UMANG ஆப்பில் ஆதார் அடிப்படை மட்டும் விண்ணப்பிக்க முடியும். முதலில் விண்ணப்பதாரின் முழு விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சாதி, வருமானம், இருப்பிடம் சான்றுகள் விண்ணப்பிக்க முடியும். அதில் விண்ணப்பதாரின் ஆவணங்கள் புகைப்படம் அல்லது பிடிஎப் பைலாக பதிவேற்றம் செய்யலாம். புதியதாக நபர்களின் ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதேபோல், ஆதார் எண் அடிப்படையில் சான்றிதழ் எளிமையாக பெறலாம்’ என்றனர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews