Breaking

Tuesday, July 03, 2018

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை


சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசுக்கு, சில பரிந்துரைகளை அளித்துள்ளது; அதன் விபரம்:சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர், பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.


இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சிறுபான்மையினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் பள்ளிகளை திறக்க வேண்டும்.இதன் மூலம், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் கல்வியறிவு பெறுவர். முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில், உருது நடுநிலைப் பள்ளிகள் துவங்க வேண்டும். அங்கு, தாய்மொழியாக உருது இருக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog