UGC& CSIR இணைந்து நடத்தும் ஆராய்ச்சியாளர் - விரிவுரையாளர் தேசிய தகுதித்தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 15, 2018

1 Comments

UGC& CSIR இணைந்து நடத்தும் ஆராய்ச்சியாளர் - விரிவுரையாளர் தேசிய தகுதித்தேர்வு



காரைக்குடி, சி.எஸ்.ஐ.,ஆர்., மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வுக்கு பதிவு செய்த 3250 பேருக்கு, காரைக்குடி கே.வி., அழகப்பா மெட்ரிக்., பள்ளி, உமையாள் ராமனாதன் கல்லுாரி, அழகப்பா பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் ஜூன் 17ல் தேர்வு நடக்கிறது.

நுழைவு சான்று உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய நுழைவு சான்றினை www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சான்று அஞ்சல் வழியாக அனுப்பப்பட மாட்டாது. 

தேர்வெழுதும் மாணவர்கள் கருப்பு மை பால்பாயிண்ட் போன எடுத்து வர வேண்டும். காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை உயிர் அறிவியல், இயற்பியல் அறிவியல் பாடத்துக்கும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேதி அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடைபெறும். நகல் நுழைவு சீட்டு வழங்கப்படமாட்டாது.

விபரங்களுக்கு 04565 241 337, 94435 02305 என்ற எண்ணிலும், dvelayutham@cecri.res.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


1 comment:

  1. is there any possible to get government jobs in computer science

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews