சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், காலியாக உள்ள, 80 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. சி.எம்.டி.ஏ.,வில், பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அறிவிக்கப்பட்ட நேரடி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், தற்காலிக அடிப்படையில், ஆள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சி.எம்.டி.ஏ.,வில் காலியாக உள்ள பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வாயிலாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, சி.எம்.டி.ஏ., நிர்வாக பிரிவு அதிகாரிகள், அரசின் அனுமதி கோரி கடிதம் அனுப்பி உள்ளனர். அரசு அனுமதி கிடைத்தவுடன், தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை, டி.என்.பி.எஸ்.சி., துவக்கும் என, தெரிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.