மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்ப கையேட்டில் எல்லா மாணவர்களும் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்ததற்காக சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் விதிமுறைகளை திருத்தி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல், தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்த பின் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகுபவர்கள் ஒரு லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பின்னர் கல்லூரியில் இருந்து விலகுபவர்கள் ₹10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.