வேளாண் துறை இளங்கலை படிப்பு நுழைவுத்தேர்வுக்கு, குஜராத் மற்றும் ம.பி., மாநிலத்தில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், திருப்பூர் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில்,
வேளாண் பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழகத்தில், கோவை, திருச்சி, மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடக்கிறது.
இளங்கலை படிப்புக்கு, திருப்பூர், கே.செட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன்சந்திரன் விண்ணப்பித்திருந்தார். இவருக்கு, குஜராத் மாநிலம், ஆமதாபாத் உஸ்மான்புராவில் உள்ள ஐடியா கல்லுாரியில் உள்ள தேர்வு மையத்தில் பங்கேற்க, ஹால் டிக்கெட் வந்துள்ளது.இதேபோல், அவினாசியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு, ம.பி., மாநிலம், போபாலில் உள்ள போபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்த நிலையில், வெளிமாநிலத்தில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எங்களால் அங்கு சென்று, தேர்வில் பங்கேற்பது மிகவும் சிரமம். எனவே, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.