ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, பச்சை நிறத்தில், புதிய சீருடைகள் வினியோக பணி, துவங்கியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டுமென, கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
நிர்வாக ரீதியாகவும், இலவச பொருட்கள் வழங்குவது, தேர்வு நடத்துவது போன்றவற்றில், பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த ஆண்டு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாணவ, மாணவியருக்கு சீருடைகளின் நிறம் மற்றும் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
இவற்றை, மாணவ - மாணவியர், தங்கள் சொந்த செலவில், துணி எடுத்து தைத்துஉள்ளனர். இந்நிலையில், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும், இந்த சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கு முன், சிவப்பு நிறத்தில் கீழ் ஆடையும், இளஞ்சிவப்பு நிறத்தில் மேல் சட்டையும் வழங்கப்பட்டு வந்தது. புதிய சீருடை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த, பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கரும்பச்சையில் கீழ் ஆடையும், இளம் பச்சையில் மேல் சட்டையும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு டிரவுசர், மேல் சட்டை; மாணவியருக்கு, குட்டை பாவாடை, மேல் சட்டையும் தரப்படுகிறது. இந்த சீருடையின் வினியோகம், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.