பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் மட்டும் 17-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலமாக 1 லட்சத்து 78,139 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேருவதற்கு 1 லட்சத்து 59,631 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டு வரை நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக மாணவர்க ளின் சான்றிதழ்களை சரிபார்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் உட் பட 42 மையங்களில் ஜூன் 8-ம் தேதி தொடங்கியது.
கூடுதலாக 3 நாட்கள்
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் மட்டும் கூடுதலாக 3 நாட்கள் (ஜூன் 17) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத் தில் கலந்துகொள்ள முடியாத மாணவர்கள் உரிய விளக்கக் கடிதம் அளித்து தங்களுக்கு பதிலாக பெற்றோர் அல்லது உறவினரை கலந்து கொள்ளச் செய்யலாம். அவ்வாறும் இயலாவிட்டால் இன்று பகல் 1.30 மணிக்கு தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்துக்கு மாணவர்கள் நேரடியாகச் செல்லலாம்.
ஒருவேளை அதுவும் முடியாவிட்டால் 17-ம் தேதி பகல் 1.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.

விளையாட்டு பிரிவினர்
விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 17-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நடைபெறும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.