'நீட்' நுழைவு தேர்வுக்காக, தமிழக அரசு நடத்திய சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பலர், 400க்கு மேலான மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சியில், திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது அங்கு, 195 பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
கன்னியாகுமரி, 173;
நாகை, 85;
சேலம், 77
விருதுநகர், 70;
சிவகங்கை, 65;
திண்டுக்கல், 55,
கோவை, 52;
திருப்பூர், 50;
புதுக்கோட்டை, 49;
ஈரோடு, 45;
துாத்துக்குடி, 43;
கிருஷ்ணகிரி, 40;
வேலுார், 31;
சென்னை, மதுரை, 30 மற்றும் காஞ்சிபுரத்தில், 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
நாமக்கல், 24;
திருச்சி, பெரம்பலுார், 23;
ராமநாதபுரம், 20;
திருவாரூர், 19;
கரூர், 17;
திருவண்ணாமலை, 15;
தேனி, 13;
கடலுார், தர்மபுரி, 11.
மேலும், தஞ்சாவூர், அரியலுார், திருவள்ளூர், தலா, 10; விழுப்புரத்தில், ஒன்பது மற்றும் நீலகிரி மாவட்டத்தில், மூன்று மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 821 பேர் அரசு பள்ளி மாணவர்கள், மற்ற, 516 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.