1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 28, 2018

Comments:0

1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு


1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது

புதிய பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

1, 6, 9 வகுப்புகளுக்கான பாட புத்தக விற்பனை கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 11-ஆம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை, ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய பாட புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு

1-ஆம் வகுப்பு முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதே போன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-இல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-இல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்கு புத்தகம் ரூ.100, தொகுதி 3-இல் (அறிவியல் ) ரூ.130, தொகுதி 4-இல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்போது அறிவிக்கவில்லை. இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews