TNSET 2018 கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு:44 ஆயிரம் பேர் எழுதினர்: மிகக் குறைவான எண்ணிக்கையிலான முதுகலை பட்டதாரிகள் எழுதியதாக கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 05, 2018

Comments:0

TNSET 2018 கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு:44 ஆயிரம் பேர் எழுதினர்: மிகக் குறைவான எண்ணிக்கையிலான முதுகலை பட்டதாரிகள் எழுதியதாக கருத்து


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வரும் நிலையில், முதுகலை பட்டதாரிகளுக்கான ஸ்லெட் (SLET )தேர்வை மிக மிக சொற்ப எண்ணிக்கையிலானவர்களே எழுதியுள்ளனர். ஸ்லெட் தேர்வை எழுதும் தகுதியை பட்டதாரிகள் இழந்து வருகிறார்களா என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக, ஸ்லெட் (SLET ) எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஸ்லெட் தேர்வு தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இன்று நடைபெற்றது.

இந்த ஆண்டு ஆயிரத்து 883 உதவி பேராசியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், 44 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். ஆனால், வி.ஏ.ஓ., அலுவலக உதவியாளர் போன்ற, சுமார் ஒன்தாயிரம் காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை, கடந்த மாதம் 20 லட்சம் பேர் எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட இந்தத் தேர்வை, பிஎச்டி முடித்தவர்கள் உள்பட 3 லட்சம் முதுநிலை பட்டதாரிகளும் எழுதினர். 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பை பறிக்கும்வகையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எழுத முண்டியடிக்கும் முதுகலை பட்டதாரிகள், ஸ்லெட் தேர்வை எழுத முன்வரவில்லை. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான பணிக்கு, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போடும் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, ஸ்லெட் தேர்வு நேர்மையாக நடைபெறுவதில்லை என்பதே கல்வியாளர்களின் பதிலாக உள்ளது.

TN SET EXAM-2018 

PAPER-I& Computer Science Original Question Paper& Answer Keys

Commerce Original Question Paper

Maths& English Answer Keys

Exam Dt:04/03/2018. Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews