TN SET 2018 தேர்வு: 41,000 பேர் பங்கேற்பு;3,000 பேர் எழுதவில்லை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 04, 2018

Comments:0

TN SET 2018 தேர்வு: 41,000 பேர் பங்கேற்பு;3,000 பேர் எழுதவில்லை.


Today News After The Exam👇

தமிழகத்தில் நடைபெற்ற உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வை 41,000பேர் எழுதினர்; 44,000 பேர் செட் தேர்வுக்கு விண்ணப்பித்தநிலையில் 3,000 பேர் தேர்வு எழுதவில்லை: அன்னைதெரசா பல்கலை. நிர்வாகம்

Today Morning News 👇 


உதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தகுதித் தேர்வு தொடங்கியது!!!


கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் செட் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில அளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாள் தேர்வும், 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 9 ஆயிரத்து 923 பேர் செட் தகுதித்தேர்வை எழுதுகின்றனர்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews