ஊதிய முரண்பாடுகள் களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி: JACTTO-GEO கிராப் தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 31, 2018

Comments:0

ஊதிய முரண்பாடுகள் களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி: JACTTO-GEO கிராப் தகவல்.





 ''அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய, குழு அமைக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார்,'' என்று, ஜாக்டோ - ஜியோ கிராப்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சண்முகராஜன் கூறினார்.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, முதல்வரை சந்தித்து பேசினோம். சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவித்தது போல, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். 'அடுத்த மாதம் இறுதிக்குள், குழு அமைக்கப்படும்; இதுகுறித்து, அதிகாரிகளுடன் பேசி, ஓரிரு நாட்களில், அரசாணை வெளியிடப்படும்' என, முதல்வர் தெரிவித்தார்.இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews