பதவி உயர்வு விதிகள் 2026 - இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி!!!! Rules 2026 - A great injustice done to secondary teachers!
ஒரு இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய பின்னரே தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும். அதன் பின்னர், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பின்னரே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைப் பெற முடியும்.
மேலும், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு, நடுநிலைப் பள்ளியில் 5 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னரே நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு உயர்வு பெற தகுதி பெற முடியும்.
இதனால், ஒரு இடைநிலை ஆசிரியர் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியை அடைய, பல கட்டங்களைக் கடந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை தாமதப்படுத்தும் மிகப்பெரிய அநீதியாகக் கருதப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.