அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி
சென்னை, பிப். 20-
ஜே.இ.இ., முதல்நிலைத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தமிழக அரசின் 'மாதி ரிப் பள்ளி' திட்டத்தின் கீழ் படித்த, அரசு பள்ளி மாண வர்கள் 448 பேர், தேசிய அளவிலான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், திருவண்ணா மலை மாவட்ட மாணவர் களான பிரவீன் 99.53; நரேஷ் 99.50; ராணிப்பேட்டை மாணவர் வேல் முருகன் 99.42 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். டெ இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
'நிதிச் சுமை என்பது, மாணவர் களின் கனவுகளுக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது' எனும் தமிழக அரசின் கொள்கையின்படி, கடந்த 2021ல் உருவாக்கப்பட்ட, மாதி ரிப்பள்ளிகள் திட்டம், திறமையான மாணவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது.
அந்த வகையில், தற்போது, 445 முதல் மாணவர்கள், ஜே.இ.இ., நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இதுவரை, 39,044 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன டைந்துள்ளனர். அரசு பள்ளி மாண வர்களில், 2,355 பேர், ஐ.ஐ.டி, தேசிய சட்டப் பல்கலை மற்றும் 'நிப்ட்' உள்ளிட்ட, 93 உயர் கல்வி நிறுவனங் களில் சேர்ந்துள்ளனர்.
அதன்படி, தமிழக அரசின் முழு நிதியுதவியுடன், 41 மாணவர்கள் ஐ.ஐ.டி.,களிலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான், மலேஷியா போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளி லும் படிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு *மாதிரிப் பள்ளிகளில்* இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி
தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளில் இருந்து 448 மாணவர்கள் JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் IIT, NLU, NIFT, NIT உள்பட 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு!!!
JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது; jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்; நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்
2026-ஆம் ஆண்டிற்கான JEE முதன்மைத் தேர்வு (Session 1) முடிவுகளைத் தேசியத் தேர்வு முகமை (NTA) பிப்ரவரி 16, 2026 அன்று வெளியிட்டது. தேர்வு முடிவுகளைச் சரிபார்க்கவும், மதிப்பெண் அட்டையைப் (Scorecard) பதிவிறக்கம் செய்யவும் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தலாம்:
jeemain.nta.nic.in ntaresults.nic.in முடிவுகளைச் சரிபார்க்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள "JEE Main 2026 Session 1 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) அல்லது கடவுச்சொல்லைப் (Password) பதிவிடவும். திரையில் தோன்றும் குறியீட்டை (Captcha) உள்ளிட்டு 'Submit' பொத்தானை அழுத்தவும்.
இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும், அதை வருங்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதி (Printout) எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியத் தகவல்கள்:
தேர்ச்சி விவரம்: இந்த ஆண்டு நடைபெற்ற முதல் அமர்வுத் தேர்வில் மொத்தம் 12 மாணவர்கள் 100 பெர்சென்டைல் (Percentile) மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பங்கேற்பு: சுமார் 13.04 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
அடுத்த கட்டம்: JEE முதன்மைத் தேர்வின் இரண்டாம் அமர்வு (Session 2) முடிவுகள் ஏப்ரல் 20, 2026 வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.