an announcement regarding the National Means-cum-Merit Scholarship (NMMS) exam in Tamil Nadu, detailing the application deadline and other key information.
The application deadline for the NMMS exam is December 20.
The scholarship provides ₹1,000 per month to selected students from 9th grade through 12th grade.
The exam for the current academic year is scheduled for January 10.
Applications must be downloaded from the dge.tn.gov.in website and submitted to the respective school headmasters with a ₹50 fee.
NMMS தேர்வு: விண்ணப்பிக்க டிச. 20 கடைசி
என்.எம்.எம்.எஸ். தேர்வு: விண்ணப்பிக்க டிச. 20 கடைசி
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்.எம்.எம்.எஸ்.தேர்வுக்குடிச.20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த வகையில், நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.விருப்பம் உள்ள 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ப்பதிவு தொடங்கி அதை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர் வுத் துறை தெரிவித்துள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، ديسمبر 17، 2025
Comments:0
Home
NMMS
NMMS 2025
NMMS Exam 2022
NMMS RESULTS
NMMS Scholarship
NMMS Scholarship Exam
NMMS தேர்வு: விண்ணப்பிக்க டிச. 20 கடைசி
NMMS தேர்வு: விண்ணப்பிக்க டிச. 20 கடைசி
Tags
# NMMS
# NMMS 2025
# NMMS Exam 2022
# NMMS RESULTS
# NMMS Scholarship
# NMMS Scholarship Exam
NMMS Scholarship Exam
التسميات:
NMMS,
NMMS 2025,
NMMS Exam 2022,
NMMS RESULTS,
NMMS Scholarship,
NMMS Scholarship Exam
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.