Permission to write the examination - பிளஸ் 2 பொதுத் தேர்வு - முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، نوفمبر 10، 2025

Comments:0

Permission to write the examination - பிளஸ் 2 பொதுத் தேர்வு - முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதி



பிளஸ் 2 பொதுத் தேர்வு முறையாக பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதி Plus 2 Public Examination - Permission to write the examination only if you come to school regularly

பள்ளிக்கு 2 பொதுத் தேர்வு எழுதுவதற் கான அனுமதிச் சீட்டை வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

முறையாக வருகை தரும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு பிளஸ் பொதுத்தேர்வுக்கு பதிவு செய் தும் தேர்வெழுத வருகை புரியா தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேர்வுத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

2 தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வுக்கு ஆண்டுதோ றும் பதிவு செய்யும் மாணவர் களில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வருவ தில்லை. இது தேர்ச்சி விகிதத் தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் துகிறது. குறிப்பாக கரோனா காலத்தில் பள்ளிக்கு சில நாள் களே வந்திருந்தாலும் அவர்க ளின் எதிர்காலம் கருதி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்டது. ஆனால் அவர்களில் பெரும்பா லோனார் பொதுத் தேர்வுக்கு வரவில்லை. இந்தப் பிரச்னைக் குத் தீர்வு காண பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறி யதாவது:

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேர்வெ ழுத முறையாக பதிவு செய்தும் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுத வர வில்லை.

குறிப்பாக, கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 8.51 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப் பாடத்தை 50,674 பேர் எழுதவில்லை. இதற்கு அடுத்த ஆண்டில் 7.80 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தமிழ் பாடத்தேர்வுக்கு 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தேர்வுக்கு 12,696 பேரும் வரவில்லை. இதேபோன்று கடந்த கல்வி யாண்டில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 8.02 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந் ததில் தமிழ்த் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் (2025-2026) முறையாக பள் ளிக்கு வந்த மாணவர்களின் விவரங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப் படும். மாணவர்களுக்கு ஆசிரி யர்கள், ஆலோசகர்கள் மூலம் பொதுத் தேர்வு குறித்த அச் சத்தைப் போக்கி, தைரியமாக எதிர்கொள்ள அலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் தேர்ச்சி பெற முடி யாதோ என நினைக்கும் மாண வர்களுக்கும் தேவையான வழி காட்டுதல்கள் வழங்கப்படும். இதன்மூலம் நிகழ் கல்வியாண் டில் பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர் பார்க்கிறோம் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة