பள்ளிகளில் 'CCTV' கட்டாயம் CCTV mandatory in schools - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 20، 2025

Comments:0

பள்ளிகளில் 'CCTV' கட்டாயம் CCTV mandatory in schools



பள்ளிகளில் 'சிசிடிவி' கட்டாயம்

பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 28 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களின் நலன்கருதி, கழிப்பறை பகுதிகளைத் தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளிடம் தவறாக நடப்பது. வன்முறை, மாணவர்களுக்குள் நடைபெறும் சிறு சண்டை, மிரட்டல் போன்ற பல அன்றாட வரம்பு மீறல்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதன் மூலம் மாணவர்களும் சுய கட்டுப்பாடுடன் வகுப்பறைகளிலும் பள்ளி வளாகங்களிலும் நடந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு என்பது முன் எப்போதையும் விட தற்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்கு காவல்துறையின் புலன் விசாரணைக்கும், உண்மையை கண்டறியவும் 'சிசிடிவி' கேமரா பதிவுகளே பெரிதும் உதவி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கும், மறுபுறம் வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்கவும் 'சிசிடிவி' கண்காணிப்பு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

சி.பி.எஸ்.இ., அதன் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 28 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களின் நலன்கருதி, கழிப்பறை பகுதிகளைத் தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளிடம் தவறாக நடப்பது. வன்முறை, மாணவர்களுக்குள் நடைபெறும் சிறு சண்டை, மிரட்டல் போன்ற பல அன்றாட வரம்பு மீறல்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதன் மூலம் மாணவர்களும் சுய கட்டுப்பாடுடன் வகுப்பறைகளிலும் பள்ளி வளாகங்களிலும் நடந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பள்ளிகளில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு என்பது முன் எப்போதையும் விட தற்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைக்கு காவல்துறையின் புலன் விசாரணைக்கும், உண்மையை கண்டறியவும் 'சிசிடிவி' கேமரா பதிவுகளே பெரிதும் உதவி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கும், மறுபுறம் வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்கவும் 'சிசிடிவி' கண்காணிப்பு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة