தீபாவளி மறுநாள் பொது விடுமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி, தீபாவளிக்கு அடுத்த நாள் அக்., 21ல் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் லைக்கொழுந் தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அக்., 18, 19 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் விடு முறை அளிக்கப்படுகி றது. மேலும், அக்., 20 திங்களன்று தீபாவளி பண்டிகை என, மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பெரும் பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலு வலர்கள், அரசு பணியா ளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத் துடன் சென்று வருவர்.
அதே போல பள்ளி கல்லுாரிகளில் களில், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாண வியர் சொந்த ஊருக்கு சென்று வருவோர், பொது போக்குவரத்து என கடு மையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே தீபா வளி பண்டிகையான அக்.,20ம் தேதிக்கு மறுநாள் செவ்வாய்க் கிழமை (அக்., 21) அன்று அரசு பள்ளிகள், கல் லுாரி, அரசு அலுவலகங்க ளுக்கு பொது விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.