ஆதிதிராவிடர்–பழங்குடியின எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஊக்கத்தொகை Incentives for the works of Adi Dravidian-Tribal writers
சென்னை, அக். 25:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தமிழக அரசு ஊக்கமளிக்கவுள்ளது. அவர்கள் தங்களது படைப்புகளை வெளியிட தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட வுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 9 எழுத்தாளர்கள், பிற சமுதாயத்தைச் சேர்ந்த ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயம் பற்றிய படைப்புகளை உருவாக்குவோர் என மொத்தம் 11 படைப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும்.
அவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும், தமிழக அர சின்இணையதளத்தில்(www.tn.gov.in)விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.