மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு சக மாணவர் வெறிச்செயல்
திருநெல்வேலி, செப். 26-
டோனாவூர் அரசு உதவி பெறும் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாண வன், சக மாணவனை அரிவாளால் வெட்டினார். அதை தடுத்த இன்னொரு மாணவனுக்கும் காயம் ஏற் பட்டது.
திருநெல்வேலி மாவட் டம் ஏர்வாடி அருகே டோனாவூரில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ., கிறிஸ் துவ டயோசீசன் நிர்வகிக் கும் வாக்கர் இருபாலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அங்கு 9ம் வகுப்பு பயி லும் மாணவர் ஒருவர், வகுப்புக்கு, தடை செய் யப்பட்ட புகையிலை பாக்கெட் கொண்டு வந் துள்ளார். அதை பார்த்த சக மாணவர், மற்ற மாணவர்க ளிடம் கூறியதால், இருவ ருக்கும் நேற்று முன்தினம்
தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை பள்ளி யில், வகுப்புக்கு செல்லும் போது, அந்த 9ம் வகுப்பு மாணவர், சக மாணவ னின் முதுகில் அரிவாளால் வெட்டினார். மாணவ னுக்கு பலத்த காயம் ஏற் பட்டது.
அதை தடுத்த இன் னொரு மாணவனுக்கும் கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. அரி வாளால் வெட்டிய மாண வனை பிடித்து ஏர்வாடி போலீசாரிடம் ஆசிரியர்கள் ஒப்படைத்தனர்.
காயமுற்ற மாணவ னுக்கு ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் 6 தையல்கள் போடப் பட்டன.
அரிவாளால் வெட்டிய மாணவன், அதே பகு தியை சேர்ந்த வடுகச்சிம
தில் கிராமத்தை சேர்ந்த வர். வெட்டுப்பட்ட 9ம் வகுப்பு மாணவன் திரு நெல்வேலி மாவட்டம் மேலச்செவலை சேர்ந் தவர். தந்தை இல்லை. தாய் மட்டுமே உள்ளார். வெட்டுவதை தடுக்க முயன்ற மாணவரும் வடு கச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர்.
சம்பவம் குறித்து, ஏர் வாடி போலீசார் இரு பிரி வுகளில் வழக்கு பதிந்து, அரிவாளால் வெட்டிய சிறு வனை திருநெல்வேலியில் உள்ள சிறார் நீதிக் குழுமம் முன், நேற்று மாலை ஆஜர் படுத்தினர்.
இந்த, இருவரும் வெவ் வேறு பிரிவினராக இருந்தா லும், தனிப்பட்ட நோக்கத் தில் சம்பவம் நடந்ததால், போலீசார் ஜாதி பிரிவு வழக்கு பதியவில்லை.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، سبتمبر 26، 2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.