முதுகலை படிப்பில் சேர விண்ணப்பம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 23, 2025

Comments:0

முதுகலை படிப்பில் சேர விண்ணப்பம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

முதுகலை படிப்பில் சேர நாளைமுதல் விண்ணப்பம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர நாளை ( புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1359012


இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 23-ம் தேதி (புதன்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews