மேற்கு வங்கத்தில் வேலை இழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 25,753 பேரின் பணி நியமனத்தை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதனை உச்ச நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில் வேலை இழப்பு மற்றும் தங்கள் சகாக்கள் மீதான போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். கொல்கத்தா, சால்ட் லேக் பகுதியில் உள்ள பள்ளிப் பணிகள் ஆணையம் வாயிலில் இப்போராட்டம் தொடங்கியது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.