2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெறப் போவது என்ன?
வரும் பிப்.25ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், வருகிற பிப்.25ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26-ம் நிதியாண்டுக்கானநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.